தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாஜி ஆசிரியர் கொலை வழக்கு ஒருவர் கைது; கூட்டாளிக்கு வலை

மாஜி ஆசிரியர் கொலை வழக்கு ஒருவர் கைது; கூட்டாளிக்கு வலை

மாஜி ஆசிரியர் கொலை வழக்கு ஒருவர் கைது; கூட்டாளிக்கு வலை


ADDED : நவ 29, 2024 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 07:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் அருகே மாஜி உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில், கடந்த 25ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பாகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.

இறந்தவர் கடலுார், வண்டிப்பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்த தினகரன், 38; உடற்கல்வி ஆசிரியர். இவர், காதல் தோல்வியால் மனமுடைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல், போதைக்கு அடிமையாகி சுற்றி வந்தது தெரிந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், தினகரன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து, கொலையாளிகள் குறித்து சிறப்பு அதிரடி படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கடந்த 24ம் தேதி சோரியாங்குப்பம் சாராயக் கடையில் இருந்த தினகரன், இரண்டு பேருடன் ஒரு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. தினகரனுடன் ஆட்டோவில் சென்ற கடலுார் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த அரவிந்த், 23; என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், சம்பவத்தன்று ஆட்டோ டிரைவரான தனது நண்பர் சதீஷ், 30, என்பவருடன் அவரது ஆட்டோவில் சோரியாங்குப்பம் சென்று, சாராயக் கடையில் மது குடித்தனர். அங்கு, அரவிந்திடம் ஏற்கனவே தகராறு செய்த சிலர் மது குடித்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த கும்பல், இருவரையும் தாக்கியது.

அங்கிருந்த தினகரன் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பின், அரவிந்த், சதீஷ் இருவரும் கடலுாருக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். அப்போது, தினகரன், அந்த ஆட்டோவில் லிப்ட் கேட்டு ஏறி சென்றார். சிறிது துாரம் சென்ற நிலையில், சதீஷ், தினகரனிடம், எங்களை தாக்கியவர்கள் யார் என்று சொல் என கேட்டபோது அவர் தெரியாது என கூறி உள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், தினகரனின் முகத்தில் பலமாக தாக்கி உள்ளனர். அவருக்கு ரத்தம் வந்து மயங்கி விழுந்த நிலையில், மழை நீரால் முகத்தை கழுவி விட்டு மீண்டும் அதே ஆட்டோவில் ஏற்றிச் சென்று சோரியாங்குப்பம் மேம்பாலத்தில் இருந்து கீழே வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அரவிந்தை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் சதீஷை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us