/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' முகாம் நிறைவு விழா
/
'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' முகாம் நிறைவு விழா
ADDED : பிப் 05, 2024 05:40 AM

வானுார், : ''ஆரோவில்லில் பெலோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது'' என ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் தெரிவித்தார்.
புதுச்சேரி, ஆரோவில்லில் மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' முகாம் நிறைவு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, பேசுகையில், 'ஆரோவில் அமைதியான ஆன்மிக மையம். சேவை மனப்பான்மை உள்ளவர்கள் இங்கு தொண்டு செய்யலாம்.
மாணவர்கள் இங்கு தங்கியிருந்து பயிற்சி மூலம் அரவிந்தர் மற்றும் அன்னையின் கருத்துகளைப் படிக்கலாம். அறிஞர்களுக்கு உதவித்தொகை (பெலோஷிப்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது' என்றார்.
விழாவில் பங்கேற்ற மாணவர்கள், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர்.

