/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் நிபுணர் பயிலரங்கம்
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் நிபுணர் பயிலரங்கம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் நிபுணர் பயிலரங்கம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் நிபுணர் பயிலரங்கம்
ADDED : ஆக 08, 2025 09:49 PM

புதுச்சேரி; பு துச்சேரி பல்கலைக்கழகத்தில் 'நிலைத்தன்மை நோக்கிய சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்கள்' தலைப்பில் ஒரு நாள் நிபுணர் பயிலரங்கம் நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பசுமை ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப துறை, ைஹதராபாத் தேசிய சேர்க்கை உற்பத்தி மையம் இணைந்து நடந்த பயிலரங்கில், தொழில் துறை நிபுணர்கள், கல்வியியல் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
இதன் துவக்க விழாவில், துணை வேந்தர் பிரகேஷ்பாபு, 3டி அச்சிடல் தொழில்நுட்பத்தின் மாற்றமளிக்கும் திறன் பற்றி கூறினார்.இந்த பயிலரங்கு நான்கு தொழில்நுட்ப அமர்வுகளாக நடைபெற்றது.
இதில் தொழில்துறை நிபுணர்கள், பொருளாதார வாய்ப்புகள் மற்றும் செலவு, பயனுள்ள 3டி அச்சிடல் தீர்வுகள் பற்றி சுதாகரும், லட்சுமி நாராயணன், எலக்ட்ரான் பீம் மெல்டிங் தொழில்நுட்பத்தின் தொழில்துறை பயன்பாடுகள் பற்றி கூறினர்.
சமர்த் தேஷ்பாண்டே, நேரடி உலோக லேசர் உறைதல் தொழில்நுட்பங்கள் குறித்தும், அமித் சக்சேனா, உலோக 3டி அச்சிடலில் முன்னேற்றங்கள், பயன்கள் பற்றியும் தெரிவித்தனர்.
மேலும், பாலிமர், உலோக சேர்க்கை உற்பத்தி, வடிமைப்புகள், பிந்தைய செயலாக்கங்கள், விண்வெளி, வாகனம், சுகாதாரம், ஆற்றல் துறைகளில் வழக்கு ஆய்வுகள் பற்றி விரிவான விவாதங்கள் நடைபெற்றது.
இதில், யுனெஸ்கோ தலைவர் அருண் பிரசாத், கலாசாரம் மற்றும் கலாசார உறவுகள் இயக்குனர் கிளெமென்ட் லுார்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கல்வி, தொழில்துறைக்கு இடையிலான ஒத்துழைப்புகள், அறிவு பகிர்வு, புதுமை வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பற்றி கூறினர்.