/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை ஏகதின லட்சார்ச்சனை
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை ஏகதின லட்சார்ச்சனை
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை ஏகதின லட்சார்ச்சனை
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை ஏகதின லட்சார்ச்சனை
ADDED : டிச 14, 2024 03:31 AM
புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 11 நரசிம்மர்களுக்கு நாளை (15ம் தேதி)ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. இங்கு ஜூவாலா, அகோபில, மாலோல, வராக உள்ளிட்ட, 11 நரசிம்மர்களாக சுவாமி காட்சி தருகிறார். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில்,நரசிம்மர்தன்னுடைய மூன்றாவது கண்ணை திறந்து பார்ப்பதாக ஐதீகம்.
இந்த கோவிலில், நாளை 15ம் தேதி காலை 9:00 மணி முதல்,மதியம் 2:00 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல்,9:00 மணி வரை, நரசிம்ம சகஸ்ரநாம அர்ச்சனை, ஏக தின லட்சார்ச்சனை நடக்கிறது.
சகஸ்ரநாம அர்ச்சனை கட்டணம் ரூ.300. இந்த அர்ச்சனையில் கலந்து கொள்பவர்களுக்கு நவ நரசிம்மர் உருவப்படம், தோத்திர புத்தகம், ரட்சை, துளசி மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.