/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் 'கை' அறுவை சிகிச்சை ஒரு நாள் பயிற்சி பட்டறை
/
ஜிப்மரில் 'கை' அறுவை சிகிச்சை ஒரு நாள் பயிற்சி பட்டறை
ஜிப்மரில் 'கை' அறுவை சிகிச்சை ஒரு நாள் பயிற்சி பட்டறை
ஜிப்மரில் 'கை' அறுவை சிகிச்சை ஒரு நாள் பயிற்சி பட்டறை
ADDED : பிப் 05, 2026 05:53 AM

புதுச்சேரி: ஜிப்மரில், 'கை அறுவை சிகிச்சை பயிற்சி வகுப்பு - கையைப் பற்றிய அனைத்தும்' என்ற தலைப்பில், ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
ஜிப்மர் எலும்பியல் அறுவை சிகிச்சை துறை சார்பில், நடந்த நிகழ்ச்சியில், வேலுார் கிறிஸ்தவ மருத்துவக் கல்லுாரி கை அறுவை சிகிச்சைத் துறைத்தலைவர் அனில் மேத்யூ, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், ஜெயக்குமார், ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி கை மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டெரன்ஸ் ஜோஸ் ஜெரோம்,சென்னை அப்போலோ பர்ஸ்ட்மெட் மருத்துவமனைகை மைக்ரோவாஸ்குலர் மற்றும் பொது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சபரி கிரிஷ் அம்பட், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பழனிவேல், ஜிப்மர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர்கள் தேவி பிரசாத் மொகபாத்திரா, தினேஷ் குமார், துறைத் தலைவர் சுரேஷ் காந்தி, உதவிப் பேராசிரியர் பத்மலட்சுமி பாரதி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி பட்டறையில், பிறவியிலேயே ஏற்படும் கை குறைபாடுகள், கைத் தொற்று நோய்கள், காயம் தொடர்பான மேலாண்மை, மற்றும் நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. எலும்பு முறிவு, கை கட்டிகள் மற்றும் பல்வேறு புற்றுநோய் கட்டிகள் குறித்து தெளிவான வழிமுறை அடிப்படையிலான சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கை அறுவை சிகிச்சை கல்வி மற்றும் வழிகாட்டல் மற்றும் நோயாளி பராமரிப்பில், நீண்ட கால பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மூத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பாலகிருஷ்ணன் கவுரவிக்கப்பட்டார்.

