/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
படகு கவிழ்ந்து ஒருவர் பலி; இருவர் படுகாயம்
/
படகு கவிழ்ந்து ஒருவர் பலி; இருவர் படுகாயம்
ADDED : டிச 04, 2024 07:57 AM

அரியாங்குப்பம் : பெஞ்சல் புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை செய்தனர். புதுச்சேரியில், புயலுடன், கன மழை கொட்டி தீர்த்து ஓய்ந்தது. நல்லவாடு கிராமத்தை சேர்ந்த மீனவர, பெரியசாமி, 53, இவரது படகில், அதே கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், சிவபெருமாள், 38, ரங்கா, 34, ஆகிய மூவரும், நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு நல்லவாடு கடற்கரையில் இருந்து,மீன் பிடிக்க சென்றனர்.
கரையில், இருந்து 300 மீட்டர் தொலைவில் சென்ற போது, திடீரென வந்த, ராட்சத அலை, படகு மீது மோதியதில், படகு தலைகுப்புர கவிழ்ந்தது. சிவபெருமாள், படகு அடியில், சிக்கி கொண்டார். மற்ற இருவரும் தப்பித்து,சிவபெருமாளை, மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து சிவபெருமாள் இறந்த விட்டதாக தெரிவித்தனர். மேலும், காயமடைந்த பெரியசாமி, ரங்கா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.