நுாறு சதவீத ஓட்டுப்பதிவு: விழிப்புணர்வு நடைபயணம்
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு: விழிப்புணர்வு நடைபயணம்
ADDED : ஏப் 04, 2026 08:24 PM

புதுச்சேரி: கூடப்பாக்கம் கிராமத்தில், நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, ஹாக்கி வீரர்கள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 9 ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, மாவட்ட தேர்தல் அலுவலம் சார்பில், ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர்களின், வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
இதில், வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டு அளித்து, நுாறு சதவீத ஓட்டுப் பதிவு என்ற வரலாற்று சாதனை படைக்க வலியுறுத்தி, சுமார் 2 கி.மீ., துாரம் நடை பயணமாக சென்று, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகித்தனர்.
வாக்காளர் விழிப்புணர்வு நடை பயணத்தில் 40 விளையாட்டு வீரர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். இது வாக்காளர் விழிப்புணர்வு அல்லாமல், இளைஞர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்தது. ஏற்பாடுகளை, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.
