நாட்டு வெடிகள் வெடித்ததில் காயமடைந்தவர் உயிரிழப்பு
நாட்டு வெடிகள் வெடித்ததில் காயமடைந்தவர் உயிரிழப்பு
UPDATED : நவ 10, 2026 10:27 AM
ADDED : நவ 10, 2026 10:24 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம். இவரது மனைவி ஆனந்தி. நாட்டு வெடிகளை தயாரித்து விற்றனர். தீபாவளியை முன்னிட்டு, கடந்த 7ம் தேதி முத்தாண்டிக்குப்பம் – நெய்வேலி சாலையில் வெங்கடாஜலத்தின் தம்பி கருணாமூர்த்தி வீட்டு அருகே கருணாமூர்த்தி, அவரது மனைவி சுகந்தி, மகன்கள் பிரியதர்ஷினி, பிரியதர்ஷன், வெங்கடாஜலம் மகன் பிரவீன் ஆகியோர் நாட்டு வெடிகளை விற்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அருகே பட்டாசு வெடித்த தீப்பொறி விழுந்ததில் நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறின. இதில் கருணாமூர்த்தி, அவரது மனைவி சுகந்தி, மகன்கள் பிரியதர்ஷினி, பிரியதர்ஷன், பிரவீன் மற்றும் பட்டாசு வாங்கிக் கொண்டிருந்த அதியமான்குப்பம் சுப்பிரமணி, 55; சக்கரபாணி,65 ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், ஆபத்தான நிலையில் இருந்த கருணாமூர்த்தி, சுப்பிரமணி இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கருணாமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
