/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரே நாடு, ஒரே தேர்தல் மாநில அமைப்பாளர்கள் கூட்டம்
/
ஒரே நாடு, ஒரே தேர்தல் மாநில அமைப்பாளர்கள் கூட்டம்
ADDED : ஜன 30, 2025 06:47 AM

புதுச்சேரி: டில்லியில் நடந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில், புதுச்சேரி, தமிழ்நாடு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில்ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மாநில அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், புதுச்சேரி பொறுப்பாளராகமாநிலகல்வியாளர் பிரிவு தலைவர் நாகேஸ்வரன், ஓய்வு பெற்ற நீதிபதி அருள்,தமிழ்நாடு சார்பாக முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டனர். இதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.