தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில் மோதி ஒருவர் சாவு

 ரயில் மோதி ஒருவர் சாவு

 ரயில் மோதி ஒருவர் சாவு


ADDED : ஜூன் 15, 2026 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 02:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுாரில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் இறந்தார்.

வில்லியனுார், சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. வில்லியனுார் ரயில்வே ஸ்டேஷனில் காண்ட்ராக்டில் டிக்கெட் கவுண்டரில் பணிபுரிகிறார்.

இவர், நேற்று காலை 5:00 மணியளவில் கவுண்டரில் டிக்கெட் விற்பனை செய்ய வந்தபோது, எதிரே உள்ள ரயில்வே டிராக்கில் 45 வயது மதிக்கத் நபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார்.

தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

அவர், நேற்று முன்தினம் இரவு 9:55 மணிக்கு சென்ற எக்மோர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us