/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெட்டி சீரமைப்பு பணியால் படகு சவாரிக்கு மட்டும் அனுமதி
/
ஜெட்டி சீரமைப்பு பணியால் படகு சவாரிக்கு மட்டும் அனுமதி
ஜெட்டி சீரமைப்பு பணியால் படகு சவாரிக்கு மட்டும் அனுமதி
ஜெட்டி சீரமைப்பு பணியால் படகு சவாரிக்கு மட்டும் அனுமதி
ADDED : டிச 10, 2024 06:41 AM
அரியாங்குப்பம்: வெள்ளத்தில், சேதமடைந்த, பாரடைஸ் பீச், ஜெட்டி சீரமைக்கும் பணி நடந்து வருவதால், படகு சவாரி மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2ம் தேதி, நோணாங்குப்பம் ஆற்றில், வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், படகு குழாமில் இருந்த 5 படகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
அதில், ஒரு படகு மட்டும் மரக்காணம் அருகே கரை ஒதுங்கியது. மற்ற 4 படகுகள் கடலில் மாயமானது.
மேலும், வெள்ளத்தினால், பாரடைஸ் பீச்சில் இருந்த ஜெட்டி, தங்கும் குடில்கள், நிழற்குடைகள் சாய்ந்து முற்றிலும் சேதமானது. 1.5 கோடி மதிப்பில் படகுகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளதாக படகு குழாம் மேலாளர் தெரிவித்துள்ளார். ஆற்றில் படந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, கடற்கரையில் குவிந்துள்ளது
பீச்சில் இருந்த ஜெட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், அங்கு, புதிய ஜெட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லாமல் இருக்க, படகு சவாரி மட்டும் நடக்கிறது. மேலும், ஜெட்டி பணிகள் முடிந்த பின்னர், சுற்றுலா பயணிகளுக்கு பீச்சில் அனுதி வழங்கப்படும் என படகு குழாம், மேலாளர் மனோஜ் தெரிவித்தார்.