/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழைய பொருட்கள் வாங்க 5 மையங்கள் திறப்பு உழவர்கரை நகராட்சி ஆணையர் தகவல்
/
பழைய பொருட்கள் வாங்க 5 மையங்கள் திறப்பு உழவர்கரை நகராட்சி ஆணையர் தகவல்
பழைய பொருட்கள் வாங்க 5 மையங்கள் திறப்பு உழவர்கரை நகராட்சி ஆணையர் தகவல்
பழைய பொருட்கள் வாங்க 5 மையங்கள் திறப்பு உழவர்கரை நகராட்சி ஆணையர் தகவல்
ADDED : அக் 30, 2024 04:32 AM
புதுச்சேரி, : சுற்றுச்சூழலை பாதுகாக்க, உழவர்கரை நகராட்சி மூலம் பழைய பொருட்களை வாங்க 5 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:
மத்திய அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின், துாய்மை மற்றும் பசுமையான தீபாவளி -2024, எனும் தொடர் நிகழ்ச்சியில், வரும் 3ம் தேதி வரை வழிமுறைகளோடு, கொண்டாட அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தன்னார்வலர்களை கொண்டு, பொது இடங்களை சுத்தம் செய்தல், தீபாவளி அன்று, வீடுகள் மட்டும் இல்லாமல், தெருக்கள், சந்தைகள், சுற்றுப்புறங்களை துாய்மையாக வைக்க முன்னுரிமை அளிப்பது.
மறுசுழற்சி மற்றும் மறு உபயோகத்திற்கான பழைய பொருட்கள் வாங்கும் மையங்கள், திறந்து, விடுகளில், பழைய பொருட்களை பெற்று குப்பை கிடங்கிற்கு செல்லும் குப்பைகளை அளவை குறைப்பது.உள்நாட்டிலேயே தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த, ஊக்குவிப்பது ஆகிய நடவடிக்கைகளை முன்நிறுத்தியுள்ளது.
அதன்படி, மறுசுழற்சி மற்றும் மறு உபயோகத்திற்கான பழைய பொருட்கள் வாங்குவதற்கு உழவர்கரை நகராட்சி அலுவலக வளாகம், மேரி உழவர்கரை உதவிப் பொறியாளர் அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலை நவீன சுகாதார மீன் அங்காடி, வெங்கட்டா நகர் சிறுவர் பூங்கா, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் கலை அரங்கம் ஆகிய இடங்களில்5 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
இம்மையங்களில், அனைத்து நாட்களில் காலை 9:00 முதல், மதியம் 1:00 மணி வரை பொதுமக்கள் வீடுகளில்மற்றும் வியாபார நிறுவனங்களில் உள்ள மறுசுழற்சி மற்றும் மறு உபயோகத்திற்கு ஏற்ற பழைய பொருட்களைவழங்க வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் தீபாவளியை கொண்டாடுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளாார்.