ADDED : மார் 07, 2024 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை : செல்லிப்பட்டு கிராமத்தில் ரூ.17 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை அங்காளன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
திருபுவனை தொகுதி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், ரூ.17 லட்சம் செலவில், பொதுப்பணி துறையின் மூலம் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தார்.மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா, திட்ட அதிகாரி கருணாநிதி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி பாலாஜி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், உதவி பொறியாளர் சீனிவாசராம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

