ADDED : நவ 07, 2025 12:44 AM

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடந்தது.
குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பில், புதியதாக வகுப்பறை கட்டடம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார்.
ஆசிரியை கோமளா வரவேற்றார். நல்லாசிரியர்வெற்றிவேல் முன்னிலை வகித்தார். மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் தலைவர் வருண், கார்த்திக், இளநிலைப் பொறியாளர் ஜெயமாறன் நோக்கவுரை ஆற்றினர். பாகூர் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் தவமுருகன் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக செந்தில்குமார் எம்.எல்.ஏ., பள்ளிக் கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர் குலசேகரன் ஆகியோர் பங்கேற்று, புதிய வகுப்பறைகளைத் திறந்து வைத்து, திறன்மிகு தொலைக்காட்சி மற்றும் பெயர் பலகை பள்ளிக்கு வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

