/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சீரமைக்கப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு
/
சீரமைக்கப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு
ADDED : பிப் 19, 2024 11:27 PM

அரியாங்குப்பம், : அரியாங்குப்பம் அரசு பள்ளியில் ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
அரியாங்குப்பம் அருந்ததிபுரம் அரசு துவக்கப்பள்ளி வகுப்பறைகள் சேதமடைந்து காணப்பட்டன. இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ.,விடம் பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, கல்வித்துறை மூலம் ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து நேற்று திறப்பு விழா நடந்தது.
சீரமைக்கப்பட்ட வகுப்பறைகளை பாஸ்கர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கல்வித்துறை முதன்மை அதிகாரி தனச்செல்வம் நேரு, பள்ளி கல்வி உதவி ஆய்வாளர் லிங்குசாமி, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி பொறுப்பாசிரியர் கோமதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

