/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெஸ்ட்டோ பார் திறப்பு; இளைஞர்கள் எதிர்ப்பு; பண்டசோழநல்லாரில் பரபரப்பு

ADDED : நவ 03, 2024 04:32 AM
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் ரெஸ்ட்டோ பார் திறப்புக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் நகரப்பகுதியில் ரெஸ்ட்டோ பார்கள் திறக்கப்பட்டு இரவு 12:00 மணி வரை இயங்கி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகரப் பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழநல்லுார் கிராமத்தில் புதிதாக ரெஸ்ட்டோ பார் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று காலை சென்று பாரை மூட வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தகவலறிந்த நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ரெஸ்ட்டோ பாருக்கு அரசு தரப்பில் முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடுமாறு தெரிவித்தனர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.