/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அன் அகாடமி போட்டி தேர்வு பயிற்சி மையம் திறப்பு
/
அன் அகாடமி போட்டி தேர்வு பயிற்சி மையம் திறப்பு
ADDED : மார் 18, 2025 04:27 AM

புதுச்சேரி: புதுச்சேரி, அண்ணா நகர், 13வது குறுக்குத் தெருவில் 'அன் அகாடமி' நீட், ஜே.இ.இ., போட்டித் தேர்வுகளுக்கான புதிய பயிற்சி மையம் திறப்பு விழா நடந்தது.
முதல்வர் ரங்கசாமி போட்டித் தேர்வுக்கான மையத்தை திறந்து வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். விழாவில், எம்.எல்.ஏ., ரிச்சர்ட், அன் அகாடமியின் சென்னை மண்டல தலைவர் கிருஷ்ணா, நீட் தேர்விற்கான இந்தியாவின் தலைசிறந்த கல்வியாளர் வாசிம் அஹமத் பத், பிரைனி புளூம்ஸ் கல்வி நிறுவனத்தின் தாளாளர் அருண்குமார் கலந்து கொண்டனர்.
விழாவில், புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன் அகாடமியின் சென்னை மண்டல தலைவர் கிருஷ்ணா கூறுகையில், 'இந்திய அளவில் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 75க்கும் மேற்பட்ட நம்பகத்தன்மை கொண்ட கோச்சிங் சென்டர்களை கொண்டுள்ள இந்தியாவின் பரந்த கற்றல் தளமான அன் அகாடமியின் போட்டி தேர்வுகளுக்கான புதிய பயிற்சி மையம், புதுச்சேரி, அண்ணா நகர், 13வது குறுக்குத் தெருவில் திறக்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது' என்றார்.