/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை மாவட்ட பா.ஜ., அலுவலகம் திறப்பு
/
உழவர்கரை மாவட்ட பா.ஜ., அலுவலகம் திறப்பு
ADDED : ஜன 04, 2024 03:23 AM

புதுச்சேரி: உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவர் அலுவலகத்தை, மாநில பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., திறந்து வைத்தார்.
புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவராக செல்வகணபதி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதன்படி, உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவராக, லாஸ்பேட்டையை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் தண்டபாணி நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, கட்சி பணிகளை மேற்கொள்வதற்கும், நிர்வாகிகளை சந்திப்பதற்கும் உழவர்கரை மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, கிழக்கு கடற்கரை சாலையில் (ராஜராஜேஸ்வரி திருமண நிலையம் அருகில்) உள்ள ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் மாவட்ட தலைவர் தண்டபாணி அமைத்துள்ளார்.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய அலுவலகத்தை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,மாநில பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை தண்டபாணிக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், சிவசங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு தொகுதிகளை சேர்ந்த பா.ஜ., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.