ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை திறப்பு
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை திறப்பு
ADDED : மார் 20, 2026 07:35 AM

புதுச்சேரி: புதுச்சேரி தேர்தல் ஆணையத்தில், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு பதிவு வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, தொகுதி வாரியாக, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பாட், இயந்திரங்களைப் தற்செயல் கலப்பு பட்டியலின் படி, பிரிக்கும் நோக்கத்திற்காக, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தேர்தல் துறையில் உள்ள மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறை, நேற்று காலை 9:45 மணிக்கு காணொலிப் பதிவின் கீழ் திறக்கப்பட்டது.
மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு அறை திறக்கப்பட்ட போது, என்.ஆர்.காங்., - பா.ஜ., - தி.மு.க., - காங்., - அ.தி.மு.க., - ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
