ADDED : அக் 04, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெத்துச்செட்டிப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ராஜ்யசபா எம்.பி., மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவறை திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, புதிதாக கட்டப்பட்ட கழிவறையை திறந்து வைத்தார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார்.
பள்ளிக்கல்வித் துணை இயக்குநர் (பெண் கல்வி) ராமச்சந்திரன், வட்டம் 1 பள்ளிக் கல்வித் துணை ஆய்வாளர் அனிதா, இளநிலைப் பொறியாளர் அனந்த பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.