/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிராபிக் சிக்னல்கள் ரிமோட் மூலம் இயக்கம்
/
டிராபிக் சிக்னல்கள் ரிமோட் மூலம் இயக்கம்
ADDED : அக் 29, 2024 06:19 AM

புதுச்சேரி: புதிய டிராபிக் சிக்னல்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் போக்குவரத்து போலீசார் இயக்கி வருகின்றனர்.
புதுச்சேரியில் பல ஆண்டிற்கு முன்பு அமைக்கப்பட்ட டிராபிக் சிக்னல்களில், இந்திரா சிக்னல், ராஜிவ் சிக்னல், நெல்லித்தோப்பு, ஒதியஞ்சாலை உள்ளிட்ட சிக்னல்களில் விளக்குகள் பழுதாகி விட்டது. இதனால், புதுச்சேரி முழுதும் உள்ள சிக்னல்களை அகற்றிவிட்டு, ரூ. 3 கோடி மதிப்பில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இ.சி.ஆர்., கொக்கு பார்க், லதா ஸ்டீல் ஹவுஸ், மடுவுபேட், சாரம், நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் நெல்லித்தோப்பு, புவன்கரே வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை, ராஜா தியேட்டர், ஒதியஞ்சாலையில் புதிய சிக்னல்கள் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சிக்னல் கம்பம் நடும் பணிகள் நடந்து வருகிறது.
புதிய சிக்னல்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சாலை நடுவில் நின்று கொண்டு போலீசார் சிக்னல்களை இயக்கி வந்தனர். புதிய சிக்னல்களில் ரிமோட் கன்ட்ரோல் வசதி உள்ளதால், சிக்னலில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் வெயில் மண்டையை பிளக்கும் நேரத்தில் சாலை நடுவில் நின்று சிக்னல்களை இயக்க தேவையில்லை. சாலையோரம் நிழலான பகுதியில் நின்று சிக்னல்களை இயக்க முடியும்.