/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆப்ரேஷன் திரிசூலம்; 51 பேர் மீது வழக்கு
/
ஆப்ரேஷன் திரிசூலம்; 51 பேர் மீது வழக்கு
ADDED : நவ 10, 2024 04:37 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நடந்த ஆப்ரேஷன் திரிசூலம் மூலம் ஆயுதம் வைத்திருந்தாக 5 பேர் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக 46 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை ஒழிப்பதற்கு ஆப்ரேஷன் திரிசூலம் என்ற திட்டம் துவங்கப்பட்டது. ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதிற்கும், ரவுடிகள் வீடுகளில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்ய நேற்று அதிகாலை ஆப்ரேஷன் திரிசூலம் மேற்கொள்ளப்பட்டது.
டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள், கிரைம் போலீசார் இணைந்து கோரிமேடு, மேட்டுப்பாளையம், அரியாங்குப்பம், ரெட்டியார்பாளையம், வாணரப்பேட்டை, கண்டாக்டர்தோட்டம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 260க்கும் மேற்பட்ட குற்ற பின்னணி உடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அரியாங்குப்பம், பி.சி.பி., நகர் விஷ்வா, 22; முத்திரைப்பாளையம், கணபதி நகர் முருகன், 29; உட்பட 5 பேர் மீது ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதுபோல், 46 பேர் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 3 பிடியாணை நிறைவேற்றப்பட்டது. அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒரு நபர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில், ஆப்ரேஷன் திரிசூலம் என்பது பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு விரைவாக தீர்வு காணும் திட்டமாகும். எதிர்காலத்தில் குற்ற செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.