sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை வரைமுறைப்படுத்த... வாய்ப்பு; ஆன் லைன் விண்ணப்பம் முதல்வர் துவக்கி வைப்பு

/

அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை வரைமுறைப்படுத்த... வாய்ப்பு; ஆன் லைன் விண்ணப்பம் முதல்வர் துவக்கி வைப்பு

அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை வரைமுறைப்படுத்த... வாய்ப்பு; ஆன் லைன் விண்ணப்பம் முதல்வர் துவக்கி வைப்பு

அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை வரைமுறைப்படுத்த... வாய்ப்பு; ஆன் லைன் விண்ணப்பம் முதல்வர் துவக்கி வைப்பு

2


ADDED : ஜூலை 22, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:21 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை இணையம் வழியாக விண்ணப்பம் பெற்றுவரைமுறைபடுத்தும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். புதுச்சேரியில் அங்கீகாரம் இன்றி கட்டப்பட்ட வீடுகளில் எண்ணிக்கை பெருகி வந்த சூழ்நிலையில் வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக வீடுகள் மீது வங்கிகளில் அவசரத்திற்கு கடன் வாங்க முடியாமல் திண்டாடி வந்தனர். இந்த அங்கீகாரம் இல்லாத வீடுகளை வரன்முறைப்படுத்த அரசு தனியான கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. ஆனால், பல ஆண்டுகளாக அரசு இதில் மவுனமாகவே இருந்து வந்தது.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது செவி சாய்த்துள்ள புதுச்சேரி அரசு அங்கீகாரம் இல்லாத வீடுகளை ஒருமுறை திட்டத்தின் கீழ் வரன்முறைப்படுத்த முடிவு செய்து அன்மையில் அரசாணை வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டமாக இணையம் வழியாக விண்ணப்பம் பெற்று அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை வரைமுறைப்படுத்தும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் துவக்கி வைத்தார். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை பொதுமக்கள் வரைமுறைப்படுத்திக்கொள்ளலாம்.

யாருக்கு பொருந்தும் இந்த திட்டம் புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும் 01.05.1987 முதல் 16.07.2025 வரை கட்டி முடிக்கப்பட்ட கூரை, தளம் ஒட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கு பொருந்தும் எப்படி விண்ணப்பம் ஒழுங்குமுறைப்படுத்த கோரும் விண்ணப்பங்கள் ஓராண்டிற்குள் இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் தேவையான கட்டணங்கள், கட்டட வரைப்படம், சான்றுகள், அனுமதியை, ஆவணங்களை விண்ணப்பித்துடன் இணைக்கப்பட்ட சரிபார்ப்பு பட்டியல் ஏற்ப சமர்பிக்க வேண்டும்

கட்டணம் எவ்வளவு குடியிருப்புகளுக்கான விண்ணப்ப கட்டம் 5 ஆயிரம் ரூபாய், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் 10 ஆயிரம் ரூபாய், குடியிருப்புகளுக்கான ஆய்வு கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு 20 ரூபாய், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கான ஆய்வு கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

சிறப்பு கட்டடங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள் கட்டட வகைளுக்குகேற்ப ஒழுங்குமுறை கட்டணத்தில் 50 சதவீத வேண்டும். அதாவது கலப்பு பயன்பாடு மற்றும் சிறப்பு வகை கட்டடங்களுக்கு ஒழுங்குமுறை கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு 750 ரூபாய், பல மாடி கட்டடங்களுக்கு ஒழுங்குமுறை கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு 1000 ரூபாய், இவற்றில் கட்டட வகைகளுக்குகேற்ப 50 சதவீதம் செலுத்த வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த திட்டத்தில் ஒழுங்குமுறைபடுத்த முடியாத கட்டட விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடயிருப்புகளில் உள்ள தனித்தனி குடியிருப்புகள், இரண்டு கட்டடங்களாக ஒழுங்குமுறைப்படுத்தும்படி வடிமைக்கப்பட்டுள்ளது. தனித்தனி குடியிருப்பு பகுதிகளை இரு கட்டங்கள் மூலம் சீரமைப்பதற்கான வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு இந்த திட்டம் தொடர்பாக தகவல்கள், நகர மற்றும் கிராம அமைப்பு துறையின் https://tcpd.py.gov.in என்ற இணையதளத்திலும், நகர அமைப்ப குழுமத்தின் https://ppa.py.gov.in என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம். அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை வைத்து கொண்டு பலரும் பத்திர பதிவு செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை வரைமுறைப்படுத்தும் வாய்ப்பினை அரசே மனம் இறங்கி கொடுக்க முன்வந்துள்ளது. எனவே தேடி வரும் வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதீங்க...

சிறப்பு விருந்தினர்கள் துவக்க நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், வீட்டு வசதி நகர, கிராம அமைப்பு துறை செயலர் கேசவன், தலைமை நகர அமைப்பாளர் வீரசெல்வம், தேசிய தகவலியல் மைய மாநில தகவலியல் அதிகாரி மகேஷ் ஹல்யால், நகர அமைப்பு குழும உறுப்பினர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us