ADDED : ஆக 24, 2026 10:43 PM
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்த பின் அவரிடம் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றது அனைவரிடத்திலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி 16வது சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று கவர்னர் உரையுடன் துவங்கியது. கவர்னர் உரை முடிந்தபின், முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை வாசித்து முடித்தப்பின் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, சிவக்கொழுந்து, மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் அலுவலகத்தில் கூடினர். தொடர்ந்து அங்கு வந்த முதல்வருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றனர். இதில், நேயம் மக்கள் கழக எம்.எல்.ஏ., நேரு, ஊசுடு தொகுதி காங்., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் ஆகியோர் முதல்வர் ரங்கசாமிக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றனர்.
இதனை பார்த்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன் ‘ எந்த அசம்பிளினா இப்படி இருக்குமா... எல்லா எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் அண்ணண வாழ்த்திர மாநிலம் இருக்குமா... அது புதுச்சேரி மட்டும்தான்’ என கூற அங்கு சிரிப்பலை எழுந்தது.
முதல்வர் ரங்கசாமியிடம் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியது.
