/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்
/
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்
ADDED : பிப் 15, 2025 05:57 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி மண்ணில் மூன்று படுகொலைகளின் ரத்தம் தெளிக்கப்பட்டு அதிர்வு அலையை உருவாக்கி உள்ளது. புதுச்சேரி வன்முறைக்களமாக மாறியுள்ளது.
சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை. ரெஸ்டோ பார்களின் பெருக்கம், கஞ்சா விற்பனை, காவல்துறையின் செயலின்மை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி எச்சரித்தும் வந்துள்ளோம். அரசோ எதற்கும் அசையாமல் அலட்சியம் காட்டியதால் வரும் விலைவுகளே இந்த சம்பவம்.
தமிழகத்தில் ஒரு மாவட்டத்தின் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கும் ஒரே ஒரு எஸ்.பி., முறையாக நிர்வகிக்கப்படும் போது, புதுச்சேரியில் 10க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருந்து சட்டம் - ஒழுங்கு சீர்கெட காரணம் என்ன. காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து கூடமாக மாறி வருகிறது. காவல் துறையில் செயலாற்றும் சிறப்பு பலனாய்வு பிரிவு என்ற ஒன்று இங்கு செயல்படுகிறதா என்று தெரியவில்லை.
மக்கள் அச்சப்பட கூடிய இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறியும் அதற்கு பதில் சொல்ல வேண்டிய காவல் துறை அமைச்சர் இதுவரை வாய் திறக்காமல் எங்கு போனார் என்று தெரியவில்லை. ஆட்சிக்கு தலைமை தாங்கும் முதல்வர் இதில் கவனம் செலுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்.
ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு தகுதியான ஐ.பி.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும். மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழும் அமைதியான புதுச்சேரி மீண்டும் உருவாக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

