/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எதிர்கட்சித் தலைவர் சிவா டி.ஐ.ஜி.,யிடம் புகார் மனு
/
எதிர்கட்சித் தலைவர் சிவா டி.ஐ.ஜி.,யிடம் புகார் மனு
எதிர்கட்சித் தலைவர் சிவா டி.ஐ.ஜி.,யிடம் புகார் மனு
எதிர்கட்சித் தலைவர் சிவா டி.ஐ.ஜி.,யிடம் புகார் மனு
ADDED : பிப் 18, 2025 06:22 AM

புதுச்சேரி: மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில், போலீசார் நடுநிலையோடு செயல்பட வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் சிவா, டி.ஐ.ஜி., சந்திய சுந்தரத்தை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொலை, பாலியல் துன்புறுத்தல், வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குற்ற வாளிகள் கைது செய்யப்பட்டாலும், குற்றச் சம்பவங்களை தடுக்க போலீஸ் தவறிவிட்டது.
கடந்த ஆண்டு முத்தியால்பேட்டையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்ட சுவடு மறையும் முன்னே, தவளக்குப்பம் தனியார் பள்ளியில் மாணவிக்கு, ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டி, மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
எனவே, போலீசார் நடுநிலையோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியும், பாதுகாப்பும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு விசாரணை யில், தாங்கள் நேரடியாக களம் இறங்கி, சம்பவத்தில் யார் ஈடுபட்டு இருந்தாலும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை காலத்தோடு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இதில், சம்பத் எம்.எல்.ஏ., தொகுதி செயலாளர் நடராஜன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, நவீன் ஆகியோர் உடனிருந்தனர்.

