/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் மழைவௌ்ள பாதிப்பு எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆய்வு
/
பாகூரில் மழைவௌ்ள பாதிப்பு எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆய்வு
பாகூரில் மழைவௌ்ள பாதிப்பு எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆய்வு
பாகூரில் மழைவௌ்ள பாதிப்பு எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆய்வு
ADDED : டிச 04, 2024 05:26 AM

பாகூர்: பாகூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. ஏம்.எல்.ஏக்கள், ஆய்வு செய்தனர்.
பெஞ்சல் புயல் மற்றும் தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அரசுத் துறைகள் இணைந்து மீட்டு, தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், அனிபால் கென்னடி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர் பாகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் குழுவினர், பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது, இரவு நேரத்தில் ஆற்று வெள்ளம் அதிகளவு வர நேரிட்டால் அதிலிருந்து மக்களை எப்படி பாதுகாப்பது, தொடர்ந்து ஆற்று வெள்ளத்தை கண்காணிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.