தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கைதான ஒப்பந்த ஆசிரியர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா

 கைதான ஒப்பந்த ஆசிரியர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா

 கைதான ஒப்பந்த ஆசிரியர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா


ADDED : பிப் 04, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை முற்றுகையிட முயன்று கைதான ஒப்பந்த ஆசிரியர்களை, எதிர்க்கட்சித் தலைவர் சிவா சந்தித்து, அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

புதுச்சேரி பள்ளி கல்வித்துறையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்திடகோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஆசிரியர்கள் நேற்று சட்டசபையை முற்றுகையிட சென்றனர்.

தகவலறிந்த போலீசார், ஆம்பூர் சாலை அருகே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இது குறித்து அறிந்த, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேரில் சென்று, ஒப்பந்த ஆசிரியர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, அவர், ஏற்கனவே சொன்னது போல் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தி.மு.க., ஆதரவாக இருக்கும் என்றார். இந்த சந்திப்பின் போது, தி.மு.க., லாசுப்பேட்டை தொகுதி செயலாளர் தியாகராஜன் உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us