/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

ADDED : மே 16, 2025 02:26 AM
புதுச்சேரி: அரசு பள்ளிகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்து, தேர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலை கவலையாக உள்ளது. 10ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் பாடத்திட்டத்தை கையாளுவதற்கு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படாததேயாகும்.
மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு திடீரென சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், புரிதல் இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. அரசுப் பள்ளிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள் மற்றும் நவீன கற்பித்தல் உபகரணங்களை மேம்படுத்தப்படவில்லை. இது மாணவர்களின் கற்றல் திறனை மேலும் பாதிக்கிறது.
தோல்வியடைந்த மாணவர்களுக்கு அரசு செலவில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்து, தேர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை திறம்பட கையாளுவதற்கு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் ஆய்வகங்கள், நுாலகங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்களை மேம்படுத்த வேண்டும்.
மாணவர்களின் நலனை முன்னிறுத்தி, இந்த முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.