தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகராட்சி ஊழியர்கள் போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் ஆதரவு

நகராட்சி ஊழியர்கள் போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் ஆதரவு

நகராட்சி ஊழியர்கள் போராட்டம் எதிர்க்கட்சி தலைவர் ஆதரவு


ADDED : ஆக 29, 2025 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 03:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்ட குழு, 4வது நாள் காத்திருப்பு போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆதரவு தெரிவித்து பேசினார்.

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்,4வது நாளாக நேற்று ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் சிவா பங்கேற்றுபேசினார். மேலும், தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ.,க்கள், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தொகுதி செயலாளர் சக்திவேல், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு 7வது, ஊதியக்குழு பரிந்துரைப்படி 33 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us