/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரத்தில் எதிர்கட்சியினரும் சிக்குவார்கள் :பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம்

ADDED : டிச 25, 2025 05:21 AM
புதுச்சேரி: போலிமருந்து விவகாரத்தில் எதிர்கட்சியினரும் சிக்குவார்கள் என பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தெரிவித்தார்.
நிருபர்களிடம் ராமலிங்கம் கூறியதாவது: காங்., ஒரு கட்டுப்பாடான கட்சி இல்லை. அவர்களால் ஒரு சரியான மற்றும் நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது. போலி மருந்து விவகாரத்தில், யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொருவராக இதில் சிக்குவார்கள். எதிர்கட்சியில் இருந்தும் இதில் ஈடுபட்டவர்கள் பெயர் வந்துவிட்டது. யார் தப்பு செய்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
நேர்மையான பிரதமர் மோடி ஆட்சியில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், முதல்வர் மற்றும் சபாநாயகர் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மார்ட்டினுக்கு, லாட்டரி மூலம் சொத்துக்கள் வந்தது. ஜே.சி.எம்., பா.ஜ., கட்சியின் பி டீம் என கூறினர். ஆனால் ஜே.சி.எம்., உடன் தொடர்பில் இருக்கும் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தானக வெளியேறி விடுவார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது.
போலி மருந்து விவகாரத்தில் அவர் சிக்கும் வரை அதை பற்றி சபாநாயகருக்கு தெரியாது. அந்த நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது முன்னாள் முதல்வர் நாராயணசாமி. நாங்கள் இதில் சி.பி.ஐ., விசாரணைக்கும் தயாராக உள்ளோம்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமியை நெல்லித்தோப்பில் உண்மையை கூறி வெற்றி பெற சொல்லுங்கள். பொய்யான கருத்துகளை கூற வேண்டாம்.
குற்றச்சாட்கள் உள்ளவர்களுக்கு பா.ஜ.,கட்சியில் பதவி வழகாது. ஜே.சி.எம்., உடன் தொடர்பில் இருப்பவர்களை நீக்கும் நடவடிக்கைகளில் கட்சி ஈடுபட்டுள்ளது என்றார்.