/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொழியியல் பண்பாட்டு நிறுவன கட்டடத்தை வேறு துறைக்கு மாற்ற மீண்டும் எதிர்ப்பு
/
மொழியியல் பண்பாட்டு நிறுவன கட்டடத்தை வேறு துறைக்கு மாற்ற மீண்டும் எதிர்ப்பு
மொழியியல் பண்பாட்டு நிறுவன கட்டடத்தை வேறு துறைக்கு மாற்ற மீண்டும் எதிர்ப்பு
மொழியியல் பண்பாட்டு நிறுவன கட்டடத்தை வேறு துறைக்கு மாற்ற மீண்டும் எதிர்ப்பு
ADDED : ஏப் 05, 2025 04:30 AM
புதுச்சேரி: மொழியில் பண்பாட்டு மைய கட்டடத்தை கல்வி துறைக்கு தாரை வார்ப்பதை கண்டித்து போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன.
புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1986ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலை பண்பாட்டுதுறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், மாநிலத்தில் கவிஞர்கள், மானிடவியல், இலக்கியம், பண்பாட்டு தளங்களை ஆய்வு செய்து, ஆவணப்படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது.
லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்திற்கு சொந்தமாக இருந்த இந்த இடம் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இங்கு பல கோடி செலவு செய்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சரிவர செயல்படாத நிலையில் அக்கட்டடத்தை மீண்டும் கேட்டு பள்ளி கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன.
கவிஞர் பாரதிதாசன் பேரன் பாரதி கூறுகையில், 'இந்த நிறுவனம் இயங்கி வரும் இடத்தை வேறு துறைக்கு அரசு அளித்து விடாமல் தொடர்ந்து இங்கு மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், இந்த நிறுவனத்தை புதுச்சேரி பல்கலையுடன் இணைக்க ஏற்பாடு செய்தபோது, அப்போதைய கல்வி அமைச்சர் காந்திராஜ், எனது தந்தை மன்னர் மன்னன் ஆகியோர் தலையிட்டு மீண்டும் தடுத்து நிறுத்தினர்.
இந்நிறுவனத்தின் தனித்துவத்தை எண்ணி தற்போதுள்ள இடத்திலேயே செயல்படவேண்டும் என்றார்.
விசாலாமான இடம் இருக்கு
தமிழறிஞர்கள் கூறுகையில், 'மாவட்ட ஆசிரியர் கல்வியியல் மையத்திற்கு கூடுதல் வகுப்பறைகள் ஏற்படுத்துவதில் தவறில்லை. இதற்கு தேவையான இடம், இம்மையத்தின் பின்புறம் நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியை ஓட்டியுள்ள இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம்' என்றனர்.

