ADDED : ஜன 21, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனை அருகே தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணி நடந்தது. இதில் திருபுவனை மேம்பாலத்திற்கு வடக்கு பகுதியில் சர்வீஸ் சாலையையொட்டி, 7 மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் செல்ல வசதியாக 'யூ' டர்ன் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வழியை பொது மக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.
அந்த வழியை அடைத்து இரும்பு தடுப்புகள் அமைக்க சாலை பணியாளர்கள் நேற்று பகல் 12:00 மணியளவில் அங்கு பள்ளம் தோண்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால், பொது மக்கள் கலைந்து சென்றனர்.

