/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
/
வாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 29, 2025 03:58 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் பல் மருத்துவ பிரிவு சார்பில் உலக வாய் சுகாதார தினத்தையொட்டி, விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
மருத்துவமனை பொறுப்பு அதிகாரி மணிமொழி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாநில பல் மருத்துவ நோடல் அதிகாரி கவிப்பிரியா பங்கேற்று வாய் சுகாதாரம் குறித்து விளக்கம் அளித்தார்.
பல் மருத்துவர் இளங்கோ முன்னிலை வகித்து, பல் மருத்துவ பிரிவில் செயல்படும் எக்ஸ்ரே, டிஜிட்டல் முறையில் பல் பிரச்னைகளை கண்டறிதல் மற்றும் இங்குள்ள வசதிகள் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாணவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற சைக்கிள் ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வாய் சுகாதாரம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.