ADDED : ஏப் 17, 2026 06:03 PM

அ நிறம் | அளவு
பாகூர்: சோரியாங்குப்பம் அரசு நடுநிலை பள்ளியில், உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஆனந்தவேல் வழிகாட்டுதலின்படி, நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேனி தலைமை தாங்கினார். பல் மருத்துவர் தேவி கலந்து கொண்டு, வாய் சுகாதாரம் குறித்து விளக்கினார்.
மாணவர்கள் வாய் சுகாதாரம் குறித்த உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, வாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்று, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
