தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்


UPDATED : நவ 12, 2026 07:22 PM

ADDED : நவ 12, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 07:22 PM ADDED : நவ 12, 2026 07:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ், தொண்டமாநத்தம் உழவர் உதவியகத்தில் பல்வேறு வகையான அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது.

உழவர் உதவியக வேளாண் அலுவலர் சங்கரதாஸ் வரவேற்றார். காரைக்கால் பஜன்கோ உழவியல் துறை பேராசிரியர் நாராயணன், அங்கக இடுபொருட்களின் அவசியம் மற்றும் நிலங்களை காப்போம் விழிப்புணர்வு இயக்கம் குறித்து விளக்கினார்.

காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் பிரபு, 3 ஜி கரைசல், மீன் அமினோ அமிலம், ஜீவாமிர்தம் மற்றும் எருக்கிலை கரைசல் தயாரிப்பு முறைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார்.

முகாமில் தொண்டமாநத்தம் உழவர் உதவிகத்திற்கு உட்பட்ட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை தொண்டமாநத்தம் உழவர் உதவியக களப்பணியாளர்கள் சுகுமார் மற்றும் மோகன் ஆகியோர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us