/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் தத்தளித்த விஜய் ரசிகர்கள் ஒதியஞ்சாலை போலீசார் மீட்பு
/
கடலில் தத்தளித்த விஜய் ரசிகர்கள் ஒதியஞ்சாலை போலீசார் மீட்பு
கடலில் தத்தளித்த விஜய் ரசிகர்கள் ஒதியஞ்சாலை போலீசார் மீட்பு
கடலில் தத்தளித்த விஜய் ரசிகர்கள் ஒதியஞ்சாலை போலீசார் மீட்பு
ADDED : அக் 29, 2024 06:22 AM

புதுச்சேரி: தமிழக வெற்றி கழக முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பங்கேற்ற பலரும், அருகில் உள்ள புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
இதில் பலர் மதுபோதையில் சுற்றி வந்தனர். நேற்று மாலை பாண்டி மெரினா கடற்கரை பாறைகள் மீது 2 இளைஞர்கள் மதுபோதையில் படுத்து கிடந்தனர். அப்போது அலையின் வேகம் அதிகமாக இருந்தாதல், இருவரும்பாறையில் இருந்து தவறி கிழே தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.
அப்போது, ரோந்து சென்ற ஒதியஞ்சாலை தலைமை காவலர் முரளி,பாறைகளுக்கு இடையில் மதுபோதையில் சிக்கி கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ், 23; துத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ், 29; ஆகிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இருவரும் விஜய் மாநாட்டில் பங்கேற்று விட்டு, புதுச்சேரியில் மது குடிக்க வந்திருந்தது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் இருவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.