/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுரிமை பறிபோகும் அபாயம் நமது மக்கள் கழகம் எச்சரிக்கை
/
ஓட்டுரிமை பறிபோகும் அபாயம் நமது மக்கள் கழகம் எச்சரிக்கை
ஓட்டுரிமை பறிபோகும் அபாயம் நமது மக்கள் கழகம் எச்சரிக்கை
ஓட்டுரிமை பறிபோகும் அபாயம் நமது மக்கள் கழகம் எச்சரிக்கை
ADDED : நவ 12, 2025 04:55 AM
புதுச்சேரி: ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் வங்கி பாஸ்புக் ஆவணங்களை ஆதாரமாக கொண்டு, அந்தந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் என, நமது மக்கள் கழகம் வலியுறுத்திஉள்ளது.
அதன் தலைவர் நேரு எம்.எல்.ஏ., அறிக்கை:
புதுச்சேரியில் தேர்தல்துறையால் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாம் நடந்து வருகிறது.
இதில் நகரப்பகுதியில் உள்ள தொகுதிகளில்பெரும்பாலான வாக்காளர்கள் வாடகை வீடுகளில் வசிப்பவர்களாக உள்ளதால், 3 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தரமாக குடியிருக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
தேர்தல் துறையின் பி.எல்.ஓ.,க்கள் அந்த முகவரியில் சென்று பார்க்கும் போது வாக்காளர்கள் அங்கு இல்லை என்றால், இடமாற்றம் எனபதிவு செய்து, அவர்களை பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலைமை உள்ளது. இதனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அவர்களால் ஓட்டு அளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
எனவே, அவர்களின் ஓட்டுரிமையை நிலைநாட்டும் விதமாக ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக்போன்றவற்றில் உள்ள முகவரிகளை ஆதாரமாக கொண்டு, ஏற்கனவே இருந்த வாக்காளர் பட்டியலில் உள்ளபடி பெயரை இடம்பெறசெய்ய வேண்டும்.
உருளையன்பேட்டை தொகுதியில் அரசியல் கட்சிகளின் பூத் முகவர்கள், தேர்தல் துறையின் பி.எல்.ஓ., களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு உள்ளதால், அந்த முகவர்கள் தங்கள்கட்சிக்கு எதிராக ஓட்டு அளிக்கக்கூடியவர்கள் அந்த முகவரியில் குடியிருக்கவில்லை என கூறி பட்டியலில் இருந்து நீக்கும் சதி செயல் நடக்கிறது.இதனால், பல ஆயிரம் வாக்காளர்களின் ஓட்டுரிமை பறிபோகும் நிலைமை ஏற்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

