/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நம்ம புதுச்சேரி 'செல்பி ஸ்பாட்' திறப்பு
/
நம்ம புதுச்சேரி 'செல்பி ஸ்பாட்' திறப்பு
ADDED : டிச 27, 2024 06:23 AM

புதுச்சேரி: காமராஜர் மணிமண்ட பத்தில் அமைக்கப்பட்டுள்ள 'செல்பி ஸ்பாட்'டை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டபத்தில், புதுச்சேரி ஈவ்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில், 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பெருமைகளை விளக்கும் வகையில் 'நம்ம புதுச்சேரி' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த 'செல்பி ஸ்பாட்' திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி ஈவ்ஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் தேவிகா வரவேற்றார். ரோட்டரிகவர்னர் வைத்தியநாதன், உதவி கவர்னர்கள் வாணி, மேரி ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர்.
முதல்வர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ''செல்பி ஸ்பாட்'டை திறந்து வைத்தார். கலை பண்பாட்டு துறை இயக்குநர் கலியபெருமாள் வாழ்த்தி பேசினர்.
விழாவில், ரோட்டரி முன்னாள் உதவி கவர்னர் டாக்டர் வனஜா வைத்தியநாதன், சங்க தலைவர் அனுராதா ராஜகோபாலன், முன்னாள் செயலாளர் வக்கீல் ஹேமாம்புஜம், முன்னாள் பொருளாளர் ரேஷ்மி, சங்க உறுப்பினர்கள், பல்வேறு ரோட்டரி சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பாத்திமா பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர். செயலாளர் ஷ்ரதா குமார் நன்றி கூறினார்.

