ADDED : ஜூன் 07, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள அரிசி கடைக்கு நேற்று காலை சரக்கு வாகனத்தில் டிரைவர் வந்தார். அவருடன், 17 வயது சிறுவனும் வந்து இருந்தார். டிரைவர் வாகனத்தை சாலையில் நிறுத்தி விட்டு சென்றார்.
அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிறுவன் வாகனத்தை இயக்கினார். கட்டுப்படுத்த முடியாமல் அந்த வேன் திடீரென அரிசி கடைக்குள் புகுந்தது. இதில் கடையின் வெளியே இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டிருந்தவர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.