/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் பணிகள் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

ADDED : செப் 20, 2024 03:26 AM

புதுச்சேரி: அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தனியார் நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையம், ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றில் பல்வேறு சுகாதாரப் பணிகளுக்கு இ-டெண்டர் முறையில் மனிதவள அவுட்சோர்சிங்கிற்காக ஒப்பந்தம் கோரப்பட்டது.
இப்பணிகளுக்கு தனியார் நிறுவனம் (M/s. Duster/s Total Solution Pvt. Ltd) தேர்வாகி, நேற்று முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறையின் இயக்குனர் (பொ) டாக்டர் செவ்வேள், தனியார் நிறுவனத்தை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் கையெழுத்திட்டு மாற்றிக் கொண்டனர்.
அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் அடிப்படையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்நிறுவனம் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரப் பணிகளை அவுட்சோர்சிங் முறையில் துவங்க உள்ளது.