கடன் வழங்குவதில் சிறப்பான செயல்பாடு: புதுச்சேரிக்கு விருது
கடன் வழங்குவதில் சிறப்பான செயல்பாடு: புதுச்சேரிக்கு விருது
UPDATED : நவ 23, 2026 08:49 PM
ADDED : நவ 23, 2026 08:49 PM

புதுச்சேரி: பிரதம மந்திரி சுவநிதி (2.0) திட்டம் கீழ் கடன் வழங்குவதில் சிறந்த செயல்பாட்டிற்கான விருது புதுச்சேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் பிரதம மந்திரி சுவநிதி (2.0) திட்டத்தின் மூலம், யூனியன் பிரதேசங்களுக்கான பிரிவில் கடன் வழங்குதலில் சிறந்த செயல்பாட்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், கடன் வழங்குவதில் சிறந்த செயல்பாட்டிற்கான விருது புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு வழங்கினார். இதில், தெருவோர வியாபாரிகள் பயனடையும் வகையில் 12.13 கோடி மதிப்பிலான 6,603 பிணையமில்லா நடைமுறை மூலதனக் கடன்கள் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில், கடந்த 2025ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட பிரதமரின் தெருவோர வியாபாரிகள் திட்டத்தின் 2.0 கீழ், 3.96 கோடி மதிப்பிலான 1,308 கடன்கள் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விருதை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு செயலர் விக்ராந்த் ராஜா, உள்ளாட்சி துறை இயக்குனர் ஆதர்ஷ், புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு, உழவர்கரை நகராட்சி ஆணையர் வினயராஜ், நகர்ப்புற வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீகுமார் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
