தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் பஸ் தடுப்பு கட்டையில் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

தனியார் பஸ் தடுப்பு கட்டையில் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

தனியார் பஸ் தடுப்பு கட்டையில் மோதி விபத்து 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்


ADDED : மே 06, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2025 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே தனியார் பஸ் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குளானதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

புதுச்சேரியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த சூரமங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் 43; என்பவர் ஓட்டிச் சென்றார்.

புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பம் அருகே சென்ற போது, மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றுள்ளது. அந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க டிரைவர் வெங்கடேசன் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்த முயன்றார்.

அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சின் இன்ஜின் உடைந்து ஆயில் சாலையில் கொட்டியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் 20க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

இச்சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us