/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவம்; உரிமையாளர், ஓட்டுநர் கைது
/
ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவம்; உரிமையாளர், ஓட்டுநர் கைது
ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவம்; உரிமையாளர், ஓட்டுநர் கைது
ஆற்றில் படகு கவிழ்ந்த சம்பவம்; உரிமையாளர், ஓட்டுநர் கைது
ADDED : ஏப் 07, 2025 06:20 AM
புதுச்சேரி; ஆற்றில் சுற்றுலா பயணிகள் ஏற்றி சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக, படகு ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீராம், 31. இவர் தனது குடும்பத்துடன், நேற்று முன்தினம் மாலை மெரினா கடற்கரையில் இருந்து, லியோ தனியார் படகில், சவாரி செய்தனர். அதே படகில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேர் படகில் சவாரி செய்தனர்.
தேங்காய்த்திட்டு துறைமுகம் அருகே மாலை 5:30 மணியளவில், சென்ற போது, படகு கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால், படகில் சென்றவர்கள் காயத்துடன் உயிர் தப்பித்தனர்.
இதுகுறித்து, கடலோர காவல்படை ஏட்டு, வரத ராஜலு, கொடுத்த புகாரின் பேரில், முதலியார் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, படகு ஓட்டுநர்கள் வாசு (எ) கீர்த்திவாசன், 20; மணிகண்டன், 21; படகின் உரிமை யாளர் சந்திரன், 24, ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின், அவர்கள் காவல் நிலைய பெயிலில் விடுவிக்கப்பட்டனர்.