/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் விவசாயிகளுக்கு நெல் உற்பத்தி மானியம்
/
காரைக்கால் விவசாயிகளுக்கு நெல் உற்பத்தி மானியம்
ADDED : மார் 30, 2025 03:21 AM
புதுச்சேரி,: காரைக்கால் விவசாயிகளுக்கு, நெல் உற்பத்தி மானியமாக 5 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 750 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25ம் ஆண்டில் காரைக்கால் பகுதியில் சம்பா, தாளடி மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 4,642 பொது பிரிவு விவசாயிகளுக்கு 4 கோடியே 87 லட்சத்து 39 ஆயிரத்து 170 ரூபாயும், அட்டவணை பிரிவை சார்ந்த 742 விவசாயிகளுக்கு 55 லட்சத்து 52 ஆயிரத்து 580 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 750 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொறியியல் பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதற்கு தேவையான குழாய் வாங்குவதற்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் வேளாண் துறையில் விண்ணப்பம் செய்து ஆழ்துளை கிணறு அமைத்த 37 பொது பிரிவு மற்றும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு மானியமாக 12 லட்சத்து 47 ஆயிரத்து 370 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேடியாக செலுத்தப்பட உள்ளது.