/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாமனார், மருமகனை தாக்கிய பெயிண்டர் கைது
/
மாமனார், மருமகனை தாக்கிய பெயிண்டர் கைது
ADDED : டிச 05, 2024 06:44 AM
புதுச்சேரி: கடலுாரை சேர்ந்தவர் கண்ணன், 85; இளநிலை பொறியாளராக பணி புரிந்து, ஓய்வு பெற்றவர். இவர் முதலியார்பேட்டையில் தனது உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்குள்ள தெரு வழியாக அவர் கடைக்கு சென்றார். அப்போது, ஏன் மழை நேரத்தில் வெளியே வருகிறாய் என, அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் வேலை செய்யும் தரணி கிண்டல் செய்து, அவரது தலையில் அடித்தார்.இதுபற்றி, கண்ணன் தனது மருமகன் ராமதாஸிடம் கூறினார். ஏன் மாமனாரை கிண்டல் செய்கிறாய் என ராமதாஸ் கேட்ட போது, நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, அவர், இருவரையும், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தரணியை கைது செய்தனர்.