தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெஞ்சு வலியால் பெயிண்டர் சாவு

நெஞ்சு வலியால் பெயிண்டர் சாவு

நெஞ்சு வலியால் பெயிண்டர் சாவு


ADDED : அக் 23, 2025 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: நெஞ்சு வலியால் அவதிப்பட்ட பெயிண்டர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர் அடுத்த இருளஞ்சந்தை, மதுரா பேட் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு 36; பெயிண்டர். இவரது மனைவி லாவண்யா, 36. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கம் காரணமாக பாலகுரு சரியாக வேலைக்கு செல்வதில்லை. கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலியால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று முன்தினம் காலை நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை லாவண்யா பாகூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு, அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் மாலை 6:00 மணியளவில், நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மீண்டும், அதே மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த நிலையில், இரவு 10:00 மணியளவில் பாலகுரு மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர், அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us