நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சோலை நகர், பட்டினத்தார் கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமாரவேல், 53; பெயிண்டர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உடைய குமாரவேல், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே, நரம்பு மண்டலம் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த குமாரவேல், நேற்று காலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.