/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிங்கப்பட்டு பள்ளியில் ஓவியப் போட்டி
/
ஆதிங்கப்பட்டு பள்ளியில் ஓவியப் போட்டி
ADDED : செப் 05, 2025 02:52 AM

பாகூர்:ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், 'பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்போம்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடந்தது.
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் நடந்த போட்டியில், துறை அலுவலர்கள் நித்தியா, தினேஷ் போட்டியை நடத்தினர்.மாணவர்களும், ஆசிரி யர்களும், பிளாஸ்டிக் ஒழிப்பு எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.
'பிளாஸ்டிக் பயன்பாட்டி னை தவிர்ப்போம்' என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், தலைமை ஆசிரியர் நான்சி ஏஞ்சலின் வரவேற்றார். தமிழ் ஆசிரியர் ரகுநாதன் தொகுப்புரையாற்றினார். ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் யோகானந்தன் செய்திருந்தார்.