/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
ராமர் கோவில் கும்பாபிேஷகம் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
ராமர் கோவில் கும்பாபிேஷகம் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
ADDED : ஜன 19, 2024 10:55 PM
புதுச்சேரி, -அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, புதுச்சேரி கிருஷ்ணா நகர் சின்மயா மிஷன் சார்பில், சின்மயா சூர்ய கோவில் வளாகத்தில் நாளை 21ம் தேதி காலை 10:00 மணிக்கு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடக்கிறது.
அதில், 'ஸ்ரீ ராம் லல்லா எனது சிறந்த நண்பர்' என்ற தலைப்பில், குரூப் 1ம் பிரிவில், எல்.கே.ஜி., முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, குரூப் 2ம் பிரிவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ராமனின் பயணம் குறித்து ஓவியப் போட்டி, குரூப் 3ம் பிரிவில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு, அயோத்தி கோவில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் பற்றி ஓவியப் போட்டி நடக்கிறது.
சின்மயா சூர்ய கோவிலில் வரும் 22ம் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை சின்மயா மிஷன் ஆன்மிக வழிகாட்டி ஆசிரியர் பிரம்மசாரினி, சரண்யா சைத்தன்யா செய்து வருகின்றனர்.